www.garudabazaar.com

இறப்புக்கு முன்.. டிரம்ஸ் சிவமணியுடன் மயில்சாமி பேசிய ஆடியோ.. மனதை கலங்கடிக்கும் பின்னணி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது அதிகாலையில் கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவரை மருத்துவமனை அழைத்து சென்ற சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Mayilsamy speak with drums sivamani before his death

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Pa. ரஞ்சித்துடன் Facebook-ல Chat பண்ணிய மோகன் ஜி.. அவரே சொன்ன தகவல்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது மறைவு பலரை வாட்டியும் வருகிறது.

சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இல்லை என்ற சூழலிலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் இல்லாத மயில்சாமியின் மறைவு பற்றி பலரும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

Mayilsamy speak with drums sivamani before his death

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, தீவிர சிவ பக்தனாக இருந்த மயில்சாமி சிவராத்திரியன்று சிவனை மனமுருகத் 58தொழுது பின்னர் அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தது பற்றியும் அதிகம் பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், சிவராத்திரியில் கலந்து கொள்வதற்கு முன்பாக டிரம்ஸ் சிவமணியுடன் மயில்சாமி பேசிய ஆடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன் கோயிலில் டிரம்ஸ் சிவமணி மற்றும் மயில்சாமி ஆகியோர் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டிருந்தனர். இதில் டிரம்ஸ் சிவமணி டிரம்ஸ் வாசிக்க, மறுப்பக்கம் இறைவனை எண்ணி மனமுருக துதி பாடவும் செய்திருந்தார் மயில்சாமி. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக டிரம்ஸ் சிவமணியுடன் பேசும் மயில்சாமி, அந்த சிவன் கோவிலில் இரவு வர முடியுமா என்பது பற்றியும் கேட்க, பதிலுக்கு டிரம்ஸ் சிவமணியும் வடபழனி கோவிலில் வாசித்த பின்னர் அங்கே வரவேண்டும் என்பது பற்றியும், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பது பற்றியும் இருவரும் உரையாடவும் செய்கின்றனர்.

Mayilsamy speak with drums sivamani before his death

Images are subject to © copyright to their respective owners.

சிவராத்திரியை முன்னிட்டு தான் விரும்பும் தெய்வமான சிவபெருமானை வழிபடுவது பற்றி மிக தீவிரமாக டிரம்ஸிடம் மயில்சாமி பேசிய விஷயங்கள் தற்போது பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது.

Also Read | "10 நாள் முன்னாடி பாக்குறப்போ மூச்சு எறைக்குதுன்னு சொன்னான்".. மயில்சாமி பத்தி மனோபாலா சொன்ன தகவல்!!

இறப்புக்கு முன்.. டிரம்ஸ் சிவமணியுடன் மயில்சாமி பேசிய ஆடியோ.. மனதை கலங்கடிக்கும் பின்னணி!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy speak with drums sivamani before his death

People looking for online information on Drums sivamani, Mayilsamy will find this news story useful.