www.garudabazaar.com

"கஷ்டம்ன்னா அவருகிட்ட தான் சொல்லுவேன்".. விவேக் மறைவால் கலங்கி இருந்த மயில்சாமி.. Throwback!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

Mayilsamy throwback speech at actor vivek demise viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Andrea Jeremiah : நாய்கள் வேட்டையாடும் கதைக்களம்.. புதிய சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்குமா "நோ எண்ட்ரி"?

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, பார்த்திபன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Mayilsamy throwback speech at actor vivek demise viral

Images are subject to © copyright to their respective owners.

மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த மயில்சாமி, கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், மக்கள் கஷ்டப்பட்டு தன்னிடம் உதவி என வரும் போதும், தனது பார்வையில் வறுமை என தெரியும் போது எந்த பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்தவர் மயில்சாமி. தான் வறுமையில் இருந்தாலும் கையில் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுக்கவும் அவர் தவறியதில்லை. மேலும், நடிகர் மயில்சாமி காரணமாக ஏராளமானோர் பயன்பெறவும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், விவேக் மறைவின் போது மயில்சாமி பேசி இருந்த விஷயங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Mayilsamy throwback speech at actor vivek demise viral

Images are subject to © copyright to their respective owners.

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்து வந்த விவேக், கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தார். அவரும், மயில்சாமியும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் காலம் கடந்து நிலைத்து நிற்கக்கூடிய வகையில் இருப்பதாகும். விவேக் மறைவுக்கு பின்னர் தற்போது மயில்சாமியும் காலமான சூழலில், அவர்கள் மாறி மாறி பேசி இருந்த வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, விவேக் மறைந்த சமயத்தில் மயில்சாமியும் சில உருக்கமான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விவேக் மறைந்த சமயத்தில் பேசி இருந்த மயில்சாமி, "பிறந்த தேதி தெரியுது. ஆனா எப்ப இறக்கப் போறோம்ன்னு யாருக்குமே தெரியல. திடீர்னு இப்படி எல்லாம் சம்பவம் நடக்கும் போது தான் மனம் ரொம்ப வேதனையா இருக்கு. யாருக்காவது ஒரு கஷ்டம்னா என்கிட்ட சொல்லுன்னு சொல்லுவாரு. என் சார்பாக எத்தனையோ ஸ்கூல் பீஸ் நான் அவருகிட்ட இருந்து வாங்கி குடுத்துருக்கேன். கஷ்டம்ன்னா நான் அவர்கிட்ட தான் சொல்லுவேன். அந்த நல்ல உள்ளம், அவரோட மனசுல என்ன நினைச்சிருந்தாரோ, கண்டிப்பா ஆத்மா சாந்தி அடையட்டும்ன்னு நான் இறைவனை வேண்டிக்குறேன்" என உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான பதிவுகள், தற்போது மயில்சாமியின் மறைவுக்கு பின்னர் பலரையும் கலங்க வைத்து வருகின்றது.

Also Read | "இது விஷம்.. இது மருந்துனு தெளிவுபடுத்துற பாடம் பகாசூரன்..".. - RK செல்வமணி.

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy throwback speech at actor vivek demise viral

People looking for online information on Mayilsamy, Mayilsamy throwback speech, Vivek will find this news story useful.