www.garudabazaar.com

தனது மகனின் பிறந்தநாளில் நடிகை ரீமாசென் வெளியிட்ட நெகிழ்ச்சி photos!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீமாசென்.

Actress Reema Sen Son 10th Birthday Celebration

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LOVE PROPOSALS பத்தி சமந்தா சொன்ன விஷயம்.. நடிகர் கவின் பகிர்ந்த EXCLUSIVE தகவல்!

2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ’மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ரீமாசென். முன்னதாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ரீமா சென், இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தளபதி விஜயுடன் பகவதி, சீயான் விக்ரம் உடன் தூள், சிம்புவுடன் வல்லவன்,  செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், கிரி, செல்லமே, திமிரு உள்ளிட்ட படங்களில் ரீமா சென் நடித்துள்ளார். இந்தியில் கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தில் கடைசியாக ரீமாசென் நடித்திருந்தார்.

Actress Reema Sen Son 10th Birthday Celebration

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை நடிகை ரீமாசென்  திருமணம் செய்து கொண்டார்.  2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

Actress Reema Sen Son 10th Birthday Celebration

Images are subject to © copyright to their respective owners.

இன்று தமது மகனின் 10-வது பிறந்தநாளை முன்னிட்டு ரீமா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை காணாத போட்டோக்களை வெளியிட்டு மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

Actress Reema Sen Son 10th Birthday Celebration

Images are subject to © copyright to their respective owners.

குழந்தை பருவம் முதல் தற்போது வரை இருக்கும் புகைப்படங்களை ரீமா சென் பகிர்ந்துள்ளார். "என் இதயம் ❤ இனி எனக்குள் இல்லை .. நீ செல்லும் எல்லா இடங்களிலும் அதை சுமந்து செல்" என தன்னுடைய வாழ்த்தில் ரீமா சென் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reema Sen (@senreema29)

Also Read | 'DOCTOR' பிரியங்கா மோகன் கூட சேர்ந்து ஒரு படம்.? நம்ம DADA கவின் FUN பதில் 😍

Actress Reema Sen Son 10th Birthday Celebration

People looking for online information on Reema sen, Reema Sen Son 10th Birthday Celebration will find this news story useful.