www.garudabazaar.com

தனுஷ் மாதிரி ஒரு ஆளு கிடைக்க திரையுலகம் தவம் செஞ்சுருக்கணும்.. வாத்தி -ஐ பாராட்டிய பாரதிராஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வாத்தி'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார்.

Bharathi Raja appreciate dhanush movie vaathi and his efforts

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "தனுஷ் மாதிரி ஒரு ஆளு கிடைக்க திரையுலகம் தவம் செஞ்சுருக்கணும்".. வாத்தி -ஐ பாராட்டிய பாரதிராஜா

தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர். வாத்தி படத்தின் இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் பணிபுரிந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வாத்தி திரைப்படம் வெளியான சூழலில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சிறந்த திரைப்படம் என்ற பெயரையும் எடுத்துள்ளது.

Bharathi Raja appreciate dhanush movie vaathi and his efforts

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, வாத்தி திரைப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். "என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கள் தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படி ஒரு பயணத்தின் போது ஸ்தம்பித்த இடம் தான் 'வாத்தி'. எத்தனையோ படங்கள் பார்க்கிறேன் அதில் இந்த படம் ஸ்பெஷல். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரண்டு காட்சிகளில் நான் நடித்துள்ளேன்.

ஊடகம் எனப்படுவது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தால் கூட மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படம் தான் 'வாத்தி'. கல்வி என்பது இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை வலியுறுத்தி சொல்கிறது. இதில் நடித்த தனுஷ் என் புள்ள மாதிரி. பொழுதுபோக்குக்காக படம் நடித்தால் கூட சமுதாய நோக்கம் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பிள்ளை கிடைக்கறதுக்கு திரையுலகம் தவம் செஞ்சிருக்கணும். நடிகன் மட்டுமில்ல நல்ல எழுத்தாளர், பாடகன், சிந்தனையாளர்.

Bharathi Raja appreciate dhanush movie vaathi and his efforts

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்துல சமுத்திரக்கனி ஒரு அற்புதமான வில்லன். நடையும், உயரமும், அந்த உடையும், நடிப்பும், கம்பீரமும் பார்க்கும் போது திரையுலகம் எத்தனையோ முத்துக்களை கண்டிருக்கிறது. அதில் ஒரு சிறந்த முத்து தான் இந்த சமுத்திரக்கனி. சம்யுக்தாவுக்கு ஒரு டீச்சருக்கான அம்சம் அப்படியே இருக்கிறது. நான் கூட மேடைல காமெடியா சொன்னேன், ஐ லவ் யூ சம்யுக்தான்னு. ஒரு டீச்சருக்கான நடை, உடை, பாவனை, பாடி லாங்குவேஜ் என அனைத்தும் சம்யுக்தா தாங்கி நிற்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் எல்லா பாட்டும் சிறப்பா இருக்கு. அவர் நமக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அனேகமா நடிப்புக்கும், இசைக்கும் இந்த வருஷத்தோட தேசிய விருது ஜிவிக்கு கிடைக்கும் என ஒரு பெரிய நம்பிக்கை இருக்கிறது.

Bharathi Raja appreciate dhanush movie vaathi and his efforts

Images are subject to © copyright to their respective owners.

வாத்தி ஒரு நல்ல டைட்டில். ஒரு வாத்தியாரோட சமூக பொறுப்பு என்ன என்பதை அழகா சொல்லியிருக்காங்க. இந்த படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்த போது அவர்களது கரகோஷம், அவர்கள் ரசித்த விதம் ஆகியவற்றை வைத்து சமீப நாட்களில் வெளியான ஒரு சிறந்த படம் என சொல்லுவேன்.

நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்பதற்காக சொல்லவில்லை. வாத்தி திரைப்படம் ஒவ்வொருவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய படம். ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கம் சென்று பார்ப்பார்கள். பார்த்துவிட்டு இந்த பாரதிராஜாவுடன் அதை பற்றி உரையாடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read | "புரொஃபைல் பிக்சர் வைப்பது குறித்து நான் சொன்னது இதான்" பகாசூரன் மோகன் ஜி விளக்கம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Raja appreciate dhanush movie vaathi and his efforts

People looking for online information on Bharathiraja, Dhanush, Vaathi will find this news story useful.