"மாப்ள நல்லா இருக்கியா, இந்தா வரேன்னு சொல்லிட்டு".. மயில்சாமி மறைவால் கலங்கிய நட்டி!!
முகப்பு > சினிமா செய்திகள்57 வயதாகும் நடிகர் மயில்சாமி திடீரென மரணம் அடைந்தது, அனைவரையும் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருந்தது.
Also Read | "நம்ம வாழுற காலத்துல இப்டி ஒருத்தன்".. மயில்சாமி பற்றி விவேக்.. கண்கலங்க வைக்கும் Throwback வீடியோ!!
தமிழ் சினிமா திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்த மயில்சாமி, நடிப்பைத் தாண்டி உதவி என யார் வந்து கேட்டாலும் தயக்கம் இல்லாமல் செய்யக்கூடியவர். தன்னிடம் பணம் இல்லாத சூழலிலும் அடுத்தவர்களிடம் வாங்கியாவது தன்னிடம் உதவி என்று கேட்டு வந்த நபர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் பெரும் உள்ளம் கொண்டவர் மயில்சாமி.
அப்படி இருக்கையில், அவரது திடீர் மறைவு சினிமா பிரபலங்கள் பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது. முன்னதாக சிவராத்திரியன்று இரவில், கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் டிரம்ஸ் சிவமணியுடன் பாட்டு பாடியும் பக்தியுடன் மயில்சாமி இருந்து வந்த சூழலில், காலையில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்த நிலையில், மயில்சாமி மறைவு குறித்து பேசி இருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ், "ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஆடியோ பங்சனில் அவரை சந்தித்திருந்தேன். 'மாப்ள எப்படி இருக்கே. நல்ல இருக்கியா?. இந்தா வரேன்னு' சொல்லிட்டு போனாரு. அப்ப தெரியாது, அதுதான் கடைசி சந்திப்பா இருக்கும்ன்னு.
அவரு தீவிர சிவபக்தர்ங்க. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் திருவண்ணாமலை கிரிவலம் போய்டுவாரு. அது மாதிரி கோவில்ல நின்னு வாய்விட்டு சிவன் பாடல்கள் எல்லாம் பாடுவார். அதெல்லாம் பெரிய குவாலிட்டி. ஒரு நடிகன் கோயில்ல போய் பாட்டெல்லாம் பாடலாமா வேண்டாமான்னு யோசிக்க மாட்டார். அங்க போனா அந்த பக்தனா மாறிடுவாரு. அப்படியே அங்கப்பிரதஷ்ணம் எல்லாம் பண்ணுவாரு. எனக்கு இதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.
இது பத்தி கேட்டா 'மாப்பிள்ளை சிவன், நமக்கெல்லாம் அப்பன்' அப்படின்னு சொல்லுவாரு. அதெல்லாம் நினைச்சு பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என தெரிவித்தார். அதே போல, கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு செய்த உதவி பற்றியும் நட்டி நட்ராஜ் உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, ஷூட்டிங்கின் போது மயில்சாமியின் நடிப்பு பற்றியும் ஏராளமான விஷயங்களை எடுத்துரைத்திருந்தார்.
Also Read | மயில்சாமி வீட்டு வாசலில் உள்ள வாசகம்.. "அதுல இருந்தது மாதிரியே வாழ்ந்துட்டு போய்ட்டாரு"
"மாப்ள நல்லா இருக்கியா, இந்தா வரேன்னு சொல்லிட்டு".. மயில்சாமி மறைவால் கலங்கிய நட்டி!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Dhamu Emotional Speech About Mayilsamy Demise
- Drums Sivamani About Late Mayilsamy Last Voice Message
- Mayilsamy House Quotes In Entrance Broke Down People
- Actor Ramesh Kanna Recalls Friendship With Mayilsamy
- Thiruvannamalai Temple Vetiver Malai In Mayilsamy Funeral
- Actor Charlie Condolence To Demise Of Actor Mayilsamy
- Actor Vivek About Mayilsamy Throwback Video Emotional
- Super Star Rajinikanth About Mayilsamy Death On Maha Shivaratri
- Mayilsamy Last Singing Video In Temple Shivaratri
- Super Star Rajinikanth About Actor Mayilsamy Last Wish
- Super Star Rajinikanth Condolences To Actor Mayilsamy Demise
- Badava Gopi Heartfelt Memories About Mayilsamy
தொடர்புடைய இணைப்புகள்
- ' அப்பா நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன் . .' | கதறி அழுத மயில்சாமி மகன்|
- கடைசி வரை நிறைவேறாத மயில்சாமி ஆசை... ரஜினிகாந்த் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் பேட்டி
- "மயில்சாமியின் கடைசி VOICE... ரொம்ப SHOCKING-ஆ இருந்துச்சு..!" DRUMS சிவமணி கண்ணீர் பேட்டி
- "ஒரு நாள் பணக்காரன். ஒரு நாள் பிச்சைக்காரன்".. மயில்சாமி பற்றி மனம் திறந்த விவேக்! Throwback Video
- "Mayilu ஏன்டா சீக்கிரம் போயிட்ட? 35 வருஷ நட்பு, ஒளிவு மறைவு இல்லாமல்"... 😭 Ramesh Kanna Emotional
- "மாப்ள மயிலு" 😭 திரும்பி வா, இறப்பு என்னால தாங்கவே முடியல - Scissor Manohar Interview
- "ACTIVE-ஆ இருக்க மனிஷனுக்கே இப்படி ஆகிடுச்சே..!" கோபிநாத் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் பேட்டி
- "உரிமையோடு எனக்கு PHONE பண்ணுவான்..! ஆனா இப்போ..😥" நடிகர் சத்யராஜ் கண்ணீர் பேட்டி
- பெரும் சோகத்தில் விழுந்த திரை பிரபலங்கள்..! கண்ணீர் மல்க மயில்சாமிக்கு அஞ்சலி
- "கடைசி நாள் என்கிட்ட மயில்சாமி சொன்ன வார்த்தை..!" மனம் உடைந்து அழுத ரேகா நாயர் பேட்டி
- "கடைசி வரைக்கும் உதவி செஞ்சே போயிட்டாரு..." மயில்சாமியை நினைத்து கலங்கிய பிரபலங்கள் பேட்டி
- "எல்லாரையும் வாழ வச்சிட்டு இடி விழுந்த மாதிரி விட்டுட்டு போயிட்டாரே..!" பிரபலங்கள் கண்ணீர்