www.garudabazaar.com

மகிழ் திருமேனி சார்பில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஆக்சன் த்ரில்லர் படங்களை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் மகிழ் திருமேனி.

Suresh Chandraa D one Channel Tweet about Magizh Thirumeni fake accounts

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO லோகேஷ் கனகராஜ் உடன் பிரபல மாடல் நடிகை.. இவங்க தானா?  வைரல் பதிவு..!

இயக்குனர்கள் செல்வராகவன் & கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின்னர் 'முன்தினம் பார்த்தேனே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'தடையற தாக்க' படத்தின் வெற்றிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

2014-ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன் திரைப்படம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது. 

Suresh Chandraa D one Channel Tweet about Magizh Thirumeni fake accounts

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் மகிழ் திருமேனி இரண்டாவது முறையாக நடிகர் அருண் விஜய்யைவைத்து இயக்கிய "தடம்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. தடம் திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த 'கலகத்தலைவன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெற்றது.

Suresh Chandraa D one Channel Tweet about Magizh Thirumeni fake accounts

Images are subject to © copyright to their respective owners.

மகிழ் திருமேனி நடிகராகவும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த டெடி படத்தில் நடித்திருந்தார். முன்னதாக இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லன் அனுராக் காஷ்யப்பிற்கு தமிழில் குரல் கொடுத்திருந்தார். அவருடைய குரல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக Lion V Hyna கதை பிரபலமானது.

இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி சார்பில் நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் டி ஒன் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Suresh Chandraa D one Channel Tweet about Magizh Thirumeni fake accounts

Images are subject to © copyright to their respective owners.

அதில், "அன்புள்ள அனைவருக்கும், எந்தவொரு போலி சமூக வலைத்தள கணக்குகளிலிருந்து வரும் செய்திகளைத் தவிர்க்குமாறும், புறக்கணிக்குமாறும் ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | 1000 கோடி வசூலை தொட்ட ஷாருக்கானின் 'பதான்'.. 5-வது படமாக படைத்த மாஸ் சாதனை!

Suresh Chandraa D one Channel Tweet about Magizh Thirumeni fake accounts

People looking for online information on D one Channel Tweet, Magizh Thirumeni, Suresh Chandraa will find this news story useful.