Yaanai

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும்.." குக் வித் கோமாளி ரசிகையின் நெகிழ வைத்த பதிவு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி தொடர்பாக ரசிகை ஒருவர், தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Cwc 3 fan girl message about reality show gone viral

Also Read | சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு.. பட ரிலீஸ் எப்போ? தெறியான வீடியோவுடன் அப்டேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிக முக்கியமான ஒன்று 'குக் வித் கோமாளி'.

இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் பெரிய அளவில் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் சீசனும் வார இறுதியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Cwc 3 fan girl message about reality show gone viral

உச்சகட்ட ஹிட் ஷோ..

இந்த நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், அவர்களுடன் சேர்ந்து கோமாளிகளாக வருபவர்கள், சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஹைலைட். ஏறக்குறைய இறுதிக் கட்டத்தையும் இந்த சீசன் எட்டியுள்ள நிலையில், வித்யுலேகா, தர்ஷன், ஸ்ருதிகா, அம்மு அபிராமி, முத்துக்குமார் உள்ளிட்டோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகி உள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக பாலா, குரேஷி, புகழ், சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, அதிர்ச்சி அருண், பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.

Cwc 3 fan girl message about reality show gone viral

ரசிகை அனுப்பிய மெசேஜ்

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளில் ஒருவரான குரேஷி, குக் வித் கோமாளி ரசிகை ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜ் பற்றி பகிர்ந்த பதிவு, இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. அந்த ரசிகை குரேஷிக்கு அனுப்பிய மெசேஜில், "எனது பதிவிற்கு நீங்கள் ரிப்ளை செய்வீர்களா என்று எனக்கு தெரியாது அண்ணா. ஆனாலும், உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்புவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Cwc 3 fan girl message about reality show gone viral

நூறு தடவைக்கு மேல பாத்துட்டேன்..

உண்மையில், கடந்த சில தினங்களாக நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், அதன் பின்னர் குக் வித் கோமாளி பார்த்த பிறகு, அதிலும் முக்கியமாக நீங்களும் ஸ்ருதிகாவும் சேர்ந்து தோன்றிய பகுதி, என் மனதை மிகவும் சாந்தமாக்கியது. நான் அதனை மீண்டும் மீண்டும் பார்த்தேன். உண்மையில் ஒரு நூறு தடவைக்கு மேலாவது அதனை நான் பார்த்து இருப்பேன். இருந்தும் எனக்கு சலிப்பு ஏற்படவே இல்லை. உங்களாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியாலும் எனது மன அழுத்தம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. மிக்க நன்றி அண்ணா. நான் உங்களின் தீவிர ரசிகை. விரைவில் உங்களை சந்திக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்" என அந்த ரசிகை தெரிவித்துள்ளார்.

Cwc 3 fan girl message about reality show gone viral

ஸ்ருதிகாவை குறிப்பிட்டு குரேஷி இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | ‘திரௌபதி’ மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘பகாசூரன்’…. செல்வராகவன் வெளியிட்ட மிரட்டல் லுக்

தொடர்புடைய இணைப்புகள்

Cwc 3 fan girl message about reality show gone viral

People looking for online information on CWC, Cwc 3 fan girl message, Reality show, Vijay Television will find this news story useful.