Nenjuku Needhi

கையில் Trips உடன் ‘CWC’ சிவாங்கி… என்ன ஆச்சு?... அவரே வெளியிட்ட புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் சிவாங்கி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

CWC sivaangi with trips in hand viral picture

குக் வித் கோமாளி 3…

குக் வித் கோமாளி சீசன் 2-ன் வெற்றிக்குப் பிறகு இப்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை என குக் வித் கோமாளி சீசன் 2-ன் ஸ்டார்ஸ்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்னர் புகழ் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார்.

CWC sivaangi with trips in hand viral picture

கவனம் ஈர்த்த சிவாங்கி…

குக் வித் கோமாளி சீசன் 2 ஸ்டார்களில் ஒருவரான சிவாங்கி மீண்டும் சீசன் 3 ல் ஒரு போட்டியாளராக சிவாங்கி கலந்துகொண்டு வருகிறார். இதற்கிடையில் அவருக்கு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடவும் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவான் டான் திரைப்படத்தில் கேரளப் பெண்ணாக நடித்திருந்தார் சிவாங்கி. அவரின் வேடம் கவனிப்பைப் பெற்றது. இப்படி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவாங்கி சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

CWC sivaangi with trips in hand viral picture

வைரல் புகைப்படம்…

கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் அவர் “ஹெல்த் ஹெல்த் ஹெல்த் ஃபர்ஸ்ட்” என்று அந்த புகைப்படத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து அந்த புகைப்படத்தின் கீழ் பல ரசிகர்களும் அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.

CWC sivaangi with trips in hand viral picture

தொடர்புடைய இணைப்புகள்

CWC sivaangi with trips in hand viral picture

People looking for online information on Cook with comali, Don, Sivaangi will find this news story useful.