90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ கெட்டப்பில் வந்த புகழ்… இந்தவாரம் CWC 3-ல செம ரகள இருக்கு…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

CWC 3 new episode pugazh came with sakthimaan getup

குக்வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான். வரும் பெண் போட்டியாளர்களிடம் ரொமான்ஸ் என்ற பெயரில் எதையாவது செய்து, பல்ப் வாங்கிக் கொள்வது, நடக்குவர்களிடம் சண்டை இழுப்பது என புகழின் அட்டகாசங்களை ரசிப்பதற்கு என்றே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலக்கிய அஷ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டன. இவர்கள் மூவருமே இப்போது சினிமாவில் கால்பதித்துள்ளனர்.

CWC 3 new episode pugazh came with sakthimaan getup

புகழின் வளர்ச்சி…

CWC பிரபலத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். "Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் ’வேலை’, ’என்னவளே’ மற்றும் ’ஜூனியர் சீனியர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வரவேற்பையும் வாழ்த்துகளையும் குவித்தது. இந்த படத்தின் சில காட்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில்  தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

CWC 3 new episode pugazh came with sakthimaan getup

சக்திமான் கெட்டப்பில் புகழ்…

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் அவ்வப்போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து வருகிறார். இதையடுத்து அடுத்தடுத்து வர உள்ள எபிசோட்களின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த எபிசோடில் 90ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச நாயகன் சக்திமான் கெட்டப்பில் வந்து ஆட்டம் பாட்டம் என கலக்கியுள்ளார் புகழ். இது சம்மந்தமான ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

CWC 3 new episode pugazh came with sakthimaan getup

தொடர்புடைய இணைப்புகள்

CWC 3 new episode pugazh came with sakthimaan getup

People looking for online information on Cook with comali 3, Pugazh, Vijay tv will find this news story useful.