“7 வருஷம் எனக்கு குழந்த இல்ல… என்ன Troll பண்றதா நெனச்சிட்டு”… chef வெங்கடேஷின் உருக்கமான Post

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் பேசியது இணையத்தில் கவனத்தைப் பெற்றது.

CWC chef venkatesh bhat post about trolls

Also Read | கலைஞர்களின் ரயில் கட்டண சலுகை… மத்திய அமைச்சருக்கு திமுக மக்களவை உறுப்பினர் T R பாலு கடிதம்

குக் வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கலகலப்பான ஒரு நிகழ்ச்சியாக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இப்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என பலரும் இப்போது பிரபலங்களாக உள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆன அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோர் தற்போது சினிமாவில் அறிமுகமாகி வளரும் நட்சத்திரங்களாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் ஜட்ஜ்களாக இருந்து நடத்தி வருகின்றனர்.

CWC chef venkatesh bhat post about trolls

வெங்கடேஷ் பட் சொன்ன கதை…

இப்போது குக் வித் கோமாளி சீசன் 3 நடந்து வரும் நிலையில், இந்த வார நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் பகிர்ந்த ஒரு  ஒரு தகவல் இணையத்தில் கவனத்தைப் பெற்றது. அதில்  “இந்த நிகழ்ச்சிய பத்தி நெறய எனக்கு சோஷியல் மீடியாவுல நெறய மெஸேஜ் எல்லாம் வந்திருக்கு. நெறய பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருந்துருக்கு. அதுலயும் குறிப்பா சொல்லணும்னா ‘ஒருத்தங்க எனக்கு 8 வருஷமா கொழந்த இல்ல. இதுக்காக நான் ட்ரீட்மெண்ட்டுக்கு போயிருந்தேன். அப்போ அங்க வந்த ஒருத்தங்க எனக்கும் குழந்த இல்ல. குக் வித் கோமாளி பாத்ததும்தான் நான் கன்சீவ் ஆனேன். நீங்களும் பாருங்க’ என்று சொன்னாங்க. அவங்க சொன்னதுக்கப்புறம்தான் நான் இந்த ஷோ பாக்க ஆரம்பிச்சேன். இப்ப நானும் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னாங்க” என்ற தகவலை அவர் நிகழ்ச்சிப் போட்டியாளர்களோடு பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரம் வெங்கடேஷின் இந்த பேச்சு இணையத்தில் ட்ரோலும் ஆனது.  பல மீம்களும் உருவாக்கப்பட்டு வைரலாகின.

CWC chef venkatesh bhat post about trolls

எமோஷனல் பதிவு…

இந்நிலையில் தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக செஃப் வெங்கடேஷ் தற்போது பகிர்ந்துள்ள பதிவு ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “ரெண்டு நாளா நான் நொறுக்கப்பட்டேன்.  மிகவும் கவலைல இருந்தேன். என்ன ட்ரோல் பண்ணதுக்காக இல்ல. மனிதம் இங்க இறந்து போச்சு. இங்க எது வேணா சாகலாம். ஆனா மனிதம் சாகக்கூடாது. இந்த உலகத்துல் இன்னும் நெறய நல்லவங்க எல்லாம் இருக்காங்க. குழந்தை செல்வம் இருக்குறவங்களுக்கு தெரியும், அது எவ்ளோ பெரிய பாக்கியம்னு. இல்லாதவங்க எந்த நிலைமைல இருப்பாங்கனு யோசிச்சு பாருங்க. மீம் கிரியேட்டர்ஸ், எனக்காக இல்ல, அந்த உயிர சுமக்குற பெண்களுக்காக கேக்குறேன், என்ன கிண்டல் பண்றதா நெனச்சுகிட்டு உங்க தரத்த தாழ்த்திக்காதீங்க. எனக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷம் கழிச்சு கெடச்ச செல்வம்தான் என்னோட குழந்தை. அப்ப அந்த நேரத்துல நான் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமா அனுபவிச்சேன்” என்று கூறியுள்ளார்.

CWC chef venkatesh bhat post about trolls

Also Read | “Career ஆரம்பத்துல இருந்தே… நா இதுக்காகதான் வந்தேன்”… ‘தி லெஜண்ட்’ ஆடியோ விழாவில் தமன்னா

தொடர்புடைய இணைப்புகள்

CWC chef venkatesh bhat post about trolls

People looking for online information on CWC, CWC chef venkatesh bhat will find this news story useful.