CWC : "சமையல்'ல மட்டுமில்லாம.. டான்ஸ்'லயும் மனுஷன் பின்றாரே.." செம Vibe-ல் வெங்கடேஷ் பட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஏராளமான காமெடி ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, சமையல் என்னும் சற்று சீரியஸான ஒரு கன்டென்ட்டை எடுத்துக் கொண்டு, முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் செல்லும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளாமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Chef venkatesh bhat dances for pathala pathala in cwc

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள, அவரின் சமையலுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், அவர்களுடன் கோமாளிகள் ஜோடி போடுவார்கள்.

குக் வித் கோமாளி

சமையல் பற்றி அனைத்தும் தெரிந்த போட்டியாளர்களும், அது பற்றி எதுவுமே தெரியாத கோமாளிகளும் இணையும் போது, குக் வித் கோமாளி செட்டே அமர்க்களமாகி விடும். வார இறுதி நாட்களில், ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியைக் காண, இதன் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், எந்த கோமாளி எந்த போட்டியாளருடன் இணைவார் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அதே போல, குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பலரும், திரைத்துறையிலும் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். இதற்கு அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி என பலரையும் உதாரணம் சொல்லலாம்.

தூண்களாக இருக்கும் நடுவர்கள்

போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளை போல, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூண்களாக இருப்பது, அதன் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான். புகழ் பெற்ற சமையல் கலைஞர்களாக அவர்கள் இருந்தாலும், கோமாளியுடன் சேர்ந்து கொண்டு, அவர்கள் அடிக்கும் லூட்டிகளும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஹைலைட் அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

'பத்தல பத்தல' பட் வெர்ஷன்

டான்ஸ், பாடல், ரகளை என குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுக்க முழுக்க குதூகூலமாக இருக்கும் நிலையில், தற்போது செஃப் வெங்கடேஷ் பட் நடனமாடும் வீடியோ ஒன்றும், அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், நாளை (03.06.2022) வெளியாக உள்ள விக்ரம் படத்தில், "பத்தல பத்தல" என்னும் பாடலை கமலே எழுதி, பாடவும் செய்திருப்பார். மேலும், இதன் லிரிக் வீடியோவில் கமல் ஆடும் சில காட்சிகள்  இடம்பெற்றிருக்கும்.

அதில் கமல் ஆடுவதை போலவே, பரத் மற்றும் குரேஷி ஆகியோருடன் இணைந்து வெங்கடேஷ் பட் நடனமாடி உள்ளார். இது தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Chef venkatesh bhat dances for pathala pathala in cwc

People looking for online information on Cook with comali, CWC 3, Pathala Pathala, Venkatesh Bhat will find this news story useful.