களைகட்டும் CWC 3… சிவகார்த்திகேயன் surprise எண்ட்ரி.. Excite ஆன போட்டியாளர்கள்..! தெறி ப்ரோமோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள உள்ளதை அடுத்து புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Surprise visit CWC 3 amid Don release

Also Read | "எப்படி அந்த படத்த தயாரிச்சீங்க?".. RJ பாலாஜி கேள்வி .. "எனக்கும் அதே டவுட்தான்" - உதய் கலகல

டான் ரிலீஸ்…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.  சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கிலும் இந்த படம் ‘காலேஜ் டான்’ என்ற பெயரில் மே 13 ஆம் தேதியே ரிலீஸ் ஆகிறது.

Sivakarthikeyan Surprise visit CWC 3 amid Don release

டான் ப்ரமோஷன்…

டான் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் விளம்பரத்துக்காக பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் படத்துக்கான் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் டான் படத்தின் டிரைலர் மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசியது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது.

Sivakarthikeyan Surprise visit CWC 3 amid Don release

CWC ல் சிவகார்த்திகேயன் Entry…

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். இது சம்மந்தமான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனைப் பார்த்து எக்ஸைட் ஆகும் போட்டியாளர்கள் ஜாலியாக அவரோடு உரையாடுவது போன்ற ப்ரோமோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியின் அது இது எது மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Surprise visit CWC 3 amid Don release

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

களைகட்டும் CWC 3… சிவகார்த்திகேயன் SURPRISE எண்ட்ரி.. EXCITE ஆன போட்டியாளர்கள்..! தெறி ப்ரோமோ.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Surprise visit CWC 3 amid Don release

People looking for online information on CWC, Don Movie, Priyanka Mohan, Sivakarthikeyan, Sivakarthikeyan Surprise visit CWC 3, Vijay Television will find this news story useful.