”கைய தூக்கவே முடியல ஜி”… புகழைப் புலம்ப விட்ட முத்துக்குமார் – என்ன ஆனது CWC 3-ல்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் வரவிருக்கும் எபிசோட்களில் புகழ் கலந்துகொண்டது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Pugazh cameo in CWC 3 and hand wrestling jolly episode

Also Read | செல்வராகவன் & கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ எப்படி இருக்கு?... தனுஷ் போட்ட வைரல் Tweet!

குக் வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான். வரும் பெண் போட்டியாளர்களிடம் ரொமான்ஸ் என்ற பெயரில் எதையாவது செய்து, பல்ப் வாங்கிக் கொள்வது, நடக்குவர்களிடம் சண்டை இழுப்பது என புகழின் அட்டகாசங்களை ரசிப்பதற்கு என்றே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலக்கிய அஷ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டன. இவர்கள் மூவருமே இப்போது சினிமாவில் கால்பதித்துள்ளனர்.

Pugazh cameo in CWC 3 and hand wrestling jolly episode

ஹீரோவான புகழ்…

CWC பிரபலத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். "Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் ’வேலை’, ’என்னவளே’ மற்றும் ’ஜூனியர் சீனியர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வரவேற்பையும் வாழ்த்துகளையும் குவித்தது. இந்த படத்தின் சில காட்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில்  விரைவில் படமாக்கப்பட உள்ளன.

Pugazh cameo in CWC 3 and hand wrestling jolly episode

புகழின் cameo

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் அவ்வப்போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து வருகிறார். இதையடுத்து அடுத்தடுத்து வர உள்ள எபிசோட்களின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் புகழ் சிறப்புப் போட்டியாளராக வந்துள்ளார். வந்த அவர் மற்றொரு போட்டியாளரான முத்துக்குமாரோடு கையை சாய்த்து பலம் பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டார். அதில் முத்துக்குமார் அவரை எளிதாக வீழ்த்த, போட்டி முடிந்ததும் தன்னால் கையை உயர்த்தவே முடியவில்லை என்று புகழ் பொய் அழுகையோடு புலம்பியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையடுத்து இந்த வார எபிசோட்களைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

Pugazh cameo in CWC 3 and hand wrestling jolly episode

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”கைய தூக்கவே முடியல ஜி”… புகழைப் புலம்ப விட்ட முத்துக்குமார் – என்ன ஆனது CWC 3-ல்? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh cameo in CWC 3 and hand wrestling jolly episode

People looking for online information on CWC 3, CWC pugazh, Pugazh, Pugazh cameo will find this news story useful.