Yaanai

மாமனிதன் படத்தின் சேட்டிலைட் உரிமம்.. கைப்பற்றிய பிரபல TV சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாமனிதன்' திரைப்படம் கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Maamanithan Movie Satellite TV Rights Bagged by Zee

Also Read | வெயில் காலம்.. பிரியா பவானி சங்கர் நடத்திய போட்டோஷூட்.. காஸ்டியூம் தான் ஹைலைட்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தர்ம துரை படத்துக்கு அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளனர்.

Maamanithan Movie Satellite TV Rights Bagged by Zee

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் வினியோகம் செய்யப்பட்டது.

Maamanithan Movie Satellite TV Rights Bagged by Zee

இந்நிலையில் மாமனிதன் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.

Also Read | குழந்தை நல்லா வளர்ந்துடுச்சே.. நடிகை ஸ்ரேயா பகிர்ந்த குழந்தையின் லேட்டஸ்ட் வைரல் போட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Maamanithan Movie Satellite TV Rights Bagged by Zee

People looking for online information on Maamanithan Movie, Maamanithan Movie Satellite TV Rights, Vijay Sethupathi, Zee will find this news story useful.