Veetla Vishesham Others Page USA

சிவாங்கியோடு சேர்ந்து மேடையில் கலக்கிய CWC புகழ்… இவ்ளோ நல்லா பாடுவாரா?.... viral வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

CWC pugazh sung in a stage with sivangi video viral

Also Read | புதிய லேட்டஸ்ட் ஃபேஷனில் அசத்திய சமந்தா.. தீயாய் பரவும் PHOTOSHOOT ஃபோட்டோஸ்

குக் வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான். வரும் பெண் போட்டியாளர்களிடம் ரொமான்ஸ் என்ற பெயரில் எதையாவது செய்து, பல்ப் வாங்கிக் கொள்வது என புகழின் அட்டகாசங்களை ரசிப்பதற்கு என்றே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். அந்த சீசனில் கலக்கிய அஷ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டன. இவர்கள் மூவருமே இப்போது சினிமாவில் கால்பதித்துள்ளனர்.

நாயகனாக…

CWC பிரபலத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். "Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் ’வேலை’, ’என்னவளே’ மற்றும் ’ஜூனியர் சீனியர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வரவேற்பையும் வாழ்த்துகளையும் குவித்தது. இந்த படத்தின் சில காட்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில்  விரைவில் படமாக்கப்பட உள்ளன.

CWC pugazh sung in a stage with sivangi video viral

தென்றல் வந்து தீண்டும்போது….

படத்தில் நடித்துவந்தாலும், அவ்வப்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிவாங்கியோடு இணைந்து இசைஞானி இளையராஜாவின் ஹிட் பாடலான ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. மேலும் இந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள் புகழ் இவ்வளவு நன்றாக பாடுவாரா என்றும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Also Read | விக்ரம் வேதா இயக்குநர்களின் எழுத்தில் பிரம்மிப்பூட்டும் சுழல் வெப் சீரிஸ்.!

 

தொடர்புடைய இணைப்புகள்

CWC pugazh sung in a stage with sivangi video viral

People looking for online information on CWC, CWC pugazh, CWC pugazh sung in a stage, Sivangi will find this news story useful.