உலக முழுவதும் ட்ரெண்டான நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பழிவாங்கப்பட்டிருக்கிறார்.

விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார்.
இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர்.
இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பலி வாங்கப்பட்டிருக்கிறார்.
காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்தியால் அடிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்து, பழிவாங்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி என்று கூறியிருக்கிறார்.
#JusticeForContractorNaesamani #பழிவாங்கப்பட்டார்கிருஷ்ணமூர்த்தி #Pray_For_Neasamani 😜🤪😁 pic.twitter.com/FJnoMmbCmf
— Sathish (@actorsathish) May 30, 2019