ஜீவா நடிப்பில் 'கீ' திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கொரில்லா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டான் சாண்டி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராதாரவி, யோகிபாபு, சதீஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரில் கொரில்லா செய்யும் அட்டகாஷங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளும் 'கொரில்லா' டீஸர் இதோ வீடியோ