தற்போதைய இணைய உலகில் சமூக வலைத்தளங்களில் தினசரி பல்வேறு விஷயங்கள் வைரலாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் நேற்று #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலாகத் தொடங்கியது. யார் இந்த நேசமணி? அவருக்கு என்ன ஆச்சு? என்று பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தேடத் தொடங்கினர்.

அப்போது தான் விஷயம் தெரியவந்தது. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிரெண்ட்ஸ்’. அதில் விஜய், சூர்யா, வடிவேலு, சார்ளி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் ஜமீன் பங்களாவில் வேலை செல்கையில், ரமேஷ் கண்ணா தவறுதலாக சுத்தியலை போட, நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் தலையில் விழுந்து விடும்.
அப்போது ’பிரெண்ட்ஸ்’ படத்தில் நடந்த சம்பவத்திற்கு, இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இது நகைச்சுவையாக கருதப்பட்டாலும், டுவிட்டரின் ஏராளமான அதிகாரப்பூர்வ பக்கங்கள் கூட, நேசமணிக்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவுகள் இடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், தளபதி 63 பற்றிய அறிவிப்பை வெளியிட இது சரியான நேரம் இல்லை அனைவரும் நேசமணிக்காக பிரத்தனை செய்யுமாறு வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
This is not the right time to ask for #Thalapathy63 update. #Pray_For_Neasamani 🙏🙏
— Archana Kalpathi (@archanakalpathi) May 30, 2019