கடந்த இரண்டு நாட்களாக எதர்சையாக ஒருவர் பதிவு போட சமூக வலைதளங்களில் வடிவேலு டிரண்டானார். அதிலும் அவர் நடித்த பிரண்ட்ஸ் பட வேடம் தான் அதிகம் பேசப்பட்டது.

இது டிரண்டாகவே படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் தங்களது அனுபவம் குறித்து பேசி வருகின்றனர். படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்த மதன் பாப் பேசுகையில், இந்த படத்தில் நான் எண்ணெயில் வழுக்கி விழுவது போல் இருக்கும் காட்சியை மட்டும் 6 நாட்கள் எடுத்தோம்.
காமெடி காட்சிகளில் கோபமாக நாங்கள் முக பாவனை செய்ய வேண்டும், ஆனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது.
அப்படி கட்டுப்படுத்தி நடித்தாலும் வடிவேலுவின் எக்ஸ்பிரஷன் எங்கள் எல்லோரையும் சிரிக்க வைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
நேசமணியின் அந்த காமெடி காட்சி மட்டும் எத்தனை நாள் எடுத்தோம் தெரியுமா? - மதன் பாப் வீடியோ