சமூக வலைதள பக்கம் ஒன்றில் சுத்தியல் குறித்த பதிவுக்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர் பிரண்ட்ஸ் படத்தில் சுத்தியலால் அடிபடும் காண்டிராக்டர் நேசமணியை போகிற போக்கில் இழுத்துவிட்டார். அது உலக டிரெண்டாகும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

கடந்த இரண்டு நாட்களில் பேஸ்புக், டிவிட்டர் என எல்லாவற்றிலும் Pray For Nesamani தான் டிரெண்டிங். இதில் என்ன ஒரு வில்லத்தனம் என்றால் தமிழர்கள் அல்லாதோர் நேசமணி யார் என விழிபிதுங்கி நின்றனர்.
இந்நிலையில் பிரெண்டஸ் படத்தில் வடிவேலுவுடன் நடித்த அனுபவங்கள் குறித்து கிருஷ்ணமூர்த்தி அதாவது ரமேஷ் கண்ணா Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் முதலில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை என்றார். பின்னர் காண்டிராக்டர் நேசமணியை தான் எப்படி பிளான் பண்ணி சுத்தியல் போட்டார் என்பதை விளக்கிக் கூறினார்.
மேலும் பேசிய அவர், 'படையப்பா', 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருந்தேன். நடிகை சரிதா தான் என்னை பிரண்ட்ஸ் படத்தில் நடிக்குமாறு அழைத்தார். பிறகு நான் சூர்யா எல்லாம் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம் . அப்போது விஜய் பெரிய ஹீரோ. சுத்தியல். நல்ல சின்னம். நாம் கட்சி ஆரம்பிச்சா இந்த சின்னத்துல தான் போட்டியிடுவேன்' என்றார்.
'சொல்வதெல்லாம் உண்மை' - நேசமணியின் மண்டையில் சுத்தியல் போட்டதை விளக்கும் கிருஷ்ணமூர்த்தி வீடியோ