மோடி சர்காருக்கு போட்டியாக நேசமணி? - பிக் பாஸ் காயத்ரி ரகுராம் ஆவேசம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலைதளங்களில் உலகளவில் ட்ரெண்டான நேசமணி ஹேஷ்டேக் குறித்து பிக் பாஸ் பிரபலமான நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Bigg Boss fame Gayathri Raghuramm slams netizens for unnecessarily trending PrayforNesamani

சிவில் இஞ்சினியரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில், சுத்தியல் குறித்து ஒருவர் இது என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர், ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி சீனை விவரித்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.

அவரது பதிவில், ‘இதை எதிலாவது அடித்தால் டங் டங் என்ற சத்தம் வரும். பெயிண்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து அவர் பாதிக்கப்பட்டார் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவினை விக்னேஷ் பிரபாகரின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியதையடுத்து, உலகளவில் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இதனிடையே, இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்பதையொட்டி, நேசமணியின் ஹேஷ்டேக்கிற்கு போட்டியாக மோடிசர்கார் ஹேஷ்டேகும் ட்ரெண்டானது. இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமும், பாஜக-வை சேர்ந்தவருமான நடிகை காயத்ரி ரகுராம் இதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாஅர்.

அவரது ட்வீட்டில், ‘மிகச்சிறந்த காமெடி சீன் தேவையில்லாமல் மீம் மற்றும் ஹேஷ்டேகாக மாறியுள்ளது. #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் தேவையில்லாத ஒன்று.  நக்கலாலும், வெட்டித்தனத்தாலும் நாம் முட்டாளாக தெரிய போகிறோம். இது பிரதமர் மோடிக்கு எதிராக செய்யப்படும் விஷயம் என்று நினைத்தால் அது மோசமான ஐடியா. இதனால் உலக மக்கள் நமக்கு மூளையில்லை என நினைப்பார்கள். இந்த காட்சியின் காமெடியை ரசிகர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. போலியான போராளிகளை கண்டு கவலைப்படுகிறேன்’ என சில ட்வீட்களை பகிர்ந்துள்ளார்.