Bigg Boss Tamil 3: அந்த கருப்பு ஆடு நீ தானா..? மீரா-சாக்ஷி சண்டையை குறும்படத்தில் அம்பலப்படுத்திய கமல்!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 21, 2019 02:11 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட்டுக்கான டாஸ்க்கின் போது மீராவுக்கு ஏற்பட்ட மன வருத்ததை மீட்டிங் போட்டு சொல்லச் சொன்னது யார் என்பது போட்டியாளர்கள் மத்தில் பெரும் குழப்பமாக இருக்க, கமல்ஹாசன் அதனை குறும்படம் போட்டு அம்பலப்படுத்தினார்.

கடிகாரத்தில் வைக்கப்பட்ட அலாரத்தை அணைக்கும் டாஸ்க்கின் முதற் சுற்றில் மீராவும், சாண்டியும் விளையாடினர். இதில் இருவருமே டீமாக விளையாடியபோது, இரண்டு அலாரத்தையும் சாண்டி அண்ணா தான் அணைத்தார், நீ போனதே வேஸ்ட் என கவின் விளையட்டாக சொன்ன வார்த்தை மீராவை காயப்படுத்தியது. இதையடுத்து, வருத்தத்தில் இருந்த மீரவிடம் சாண்டியும், கவினும் சமாதானம் பேசியதையடுத்து கவின் மன்னிப்புக் கேட்டார்.
இந்த பிரச்சனையை அங்கேயே முடிக்காமல் ரேஷ்மா அதைப்பற்றி பேச, ஹவுஸ் கேப்டனான சாக்ஷி-மீரா இது சம்மந்தமாக ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்தனர். அந்த மீட்டிங்கை வைக்க வேண்டும் என்றது யார் என்ற கேள்வி வர மீரா மீது சாக்ஷி சொல்ல, சாக்ஷி மீது மீரா குறை சொல்ல, ஹவுஸ்மேட்ஸ் அனைரவும் மீரா மீது தான் தவறு என்ற முடிவுக்கு வந்தனர்.
இந்த விவகாரம் பற்றி பேசிய கமல்ஹாசன், குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டி உண்மையில் மீட்டிங் போட சொன்னது யார் என்பதை அம்பலப்படுத்தினார். அந்த குறும்படத்தின் இந்த விவகாரம் தொடர்பாக சாக்ஷி, மீரா பேசிய உரையாடலில் சாக்ஷி தான் மீட்டிங் போட வேண்டும் என கூறியது தெரியவந்தது. இந்த பிரச்சனையும் முடிந்தது.