Bigg Boss Tamil 3: ‘I'm Done - கூப்டுங்க என்ன.. நான் போறேன்.. என்னால முடியல’ - கவின் எடுத்த அதிரடி முடிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 20, 2019 01:10 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 26ம் நாள் நடந்த சம்பவம் கவின் மனதை மிகவும் புண்படுத்த, அவர் போட்டியைவிட்டு வெளியேற விரும்புவதாக பிக் பாஸிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் கவின் - லொஸ்லியா-ஷாக்ஷி விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கும் நிலையில், இருவரிடமும் பேசி சமாதானம் செய்துவிடலாம், பிரச்சனையை தீர்த்துவிடலாம் என கவின் பல முயற்சிகளை எடுத்தார்.
சாக்ஷியிடம் தனியாக பேசி அவரை சமாதனம் செய்து மன்னிப்புக் கேட்டார், அவர் தான் மிகவும் புண்பட்டிருப்பதால் பழைய நிலைக்கு வர சிறிது அவகாசம் தேவைப்படும் என்றார். அதேபோல் லொஸ்லியாவிடம் பேசிய கவின், தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிபுக் கேட்டார். ஆனால், லொஸ்லியா அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்று கூறினார்.
மேலும், ஒருவரது உணர்ச்சிகளுடன் விளையாடுவது மிகப்பெரிய தவறு என்று சுட்டிக்காட்டிய லொஸ்லியா, இந்த விளையாட்டிற்காக நீ நடிப்பது போல் தெரிகிறது. நீ எது பேசினாலும் நம்ப முடியவில்லை என கவினிடம் கூற, இது அவர் மனதை காயப்படுத்த, நேற்றைக்கு பேசியது, அதற்கு முன்பு உன்னுடன் பழகியது எல்லாம் நடிப்பு தான் மச்சான். I'm done’ என கூறினார். பதிலுக்கு நானும் done என கூறிய லொஸ்லியா கோபமாக எழுந்துச் சென்றார்.
லொஸ்லியா வார்த்தையால் புண்படுத்தியதை தாங்க முடியாத கவின், நேரடியாக கேமரா முன்பு சென்று, ‘I'm done. என்னால முடியல. இதுக்கு மேல இங்க இருக்க யாரும் எனக்கு உதவ முடியாது. கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க உங்ககிட்ட பேசிட்டு கிளம்புறேன் பிக் பாஸ்’ என கூறி கவின் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.
பின்னர், சாக்ஷி, ஷெரின் ஆகியோர் கவினை சமாதானம் செய்து யோசித்து முடிவெடுக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து, கவின் வெளியேறுவாரா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.