Bigg Boss Tamil 3: என்னது அவர் கேவலமான படம் எடுத்தாரா..? சாண்டியின் டிக்கி பம் பம் மூவ் செம்ம மா!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 21, 2019 12:12 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட Life Chat Show-வில் ஒரு போட்டியாளரை பற்றிய புரளி மற்றும் உண்மையை கூற வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த டாஸ்க்கை அபிராமி தொகுத்து வழங்க, சரவணன் சேரனை பற்றி கூற வேண்டியிருந்தது. அப்போது புரளியாக சேரனை பற்றி பேசிய சரவணன், கேவலமான படங்களை இயக்கியவர் என்றும் உண்மையாக தேசிய விருது வென்று பல நல்ல திரைப்படங்களை இயக்கியவர் என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து வந்த சாண்டி, சிக்னேச்சர் மூவ்-ஆக டிக்கி பம் பம் டிக்கி பம் பம்.. Movement ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதையடுத்து, ரேஷ்மா பற்றி பேசிய சாண்டி, மேக்கப் போட்டா ரேஷ்மா, மேக்கப் இல்லாட்டி பூஷ்மா என கிண்டலடித்தார். மேலும், ரேஷ்மாவின் நடையையும் விமர்சித்து, அவரை போலவே நடந்துக் காட்டி Chat Show-வை கலகலக்கச் செய்தார்.
அதன் பின் ஷெரின் பற்றி பேசிய தர்ஷன், என்ன கல்யாணம் கட்டத்தான் ஷெரின் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார், வந்ததும் என்னை பார்த்து விழுந்துவிட்டார் என்ற புரளியை கிளப்பினார். உண்மையை பேசும்போது, ஷெரின் ரொம்ப அழகானவர், ரொம்ப மெச்சூர்டா இருப்பாங்க என்றார்.