Bigg Boss Tamil 3: ‘கொஞ்சம் அழகாக ஏன் தான்.. போதும் நான் பட்ட பாடு..!’- சாக்ஷியா? லொஸ்லியாவா? கதறிய கவின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 19, 2019 11:58 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக சாக்ஷி-கவின்-லொஸ்லியா இடையே இருக்கும் காதலா? நட்பா? குழப்பம் அவர்களை மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியிலும் இருக்கிறது.
![Bigg Boss Tamil 3 Highlights - Kavin cried over can't deal with Losliya and Sakshi's affair Bigg Boss Tamil 3 Highlights - Kavin cried over can't deal with Losliya and Sakshi's affair](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-tamil-3-highlights-kavin-cried-over-cant-deal-with-losliya-and-sakshis-affair-news-1.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது சாக்ஷியிடம் நெருக்கமாக நட்பு பாராட்டிய கவின் பின்னர் லொஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் சாக்ஷி கவின் மீது பொசசிவ் ஆக பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிற்கிறது. சாக்லெட் கொடுத்த விவகாரத்தால் மூன்று பேர் நடுவே இருந்த பிரச்சனை பிக் பாஸ் வீட்டில் தற்போது பவிஸ்வரூபம் எடுத்துள்ளது.
கவினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்து அழுத சாக்ஷியை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்றுக் கூடி சமாதானம் செய்தனர். அப்போது பேசிய லொஸ்லியா, ‘இருவருக்கும் இடையில் நான் வந்துட்டதா தோணுது. இருக்க போறது கொஞ்ச நாள்.. அவனும் அப்செட்டா இருக்கான் ரெண்டு பேரும் எனக்காக பேசி சமாதானம் ஆகுங்க. என்னால ரெண்டு பேரையும் இப்படி பாக்க முடியல’ என லொஸ்லியா கூறினார்.
இதையடுத்து, சேரன் கூறிய அறிவுரையின் பேரில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் அழைத்து கவின் மன்னிப்புக் கேட்டார். அத்துடன் பாத்ரூமில் சென்று கதவடைத்துக் கொண்ட கவின், கதறி கதறி அழுதார். அதை பார்த்த பார்வையாளர்களும், கவின் ஆர்மியனரும் கலங்கியிருப்பார்கள். இரண்டு பேரையும் பிடிக்கும், ஆனால் என்னால் இரண்டு பேருமே மன கஷ்டத்தில் இருக்கின்றனர் என தனது தவறை உணர்ந்து கவின் வருந்தினார்.