Bigg Boss Tamil 3: இந்த வாரம் காப்பாற்றப்படுவது யார்?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 21, 2019 12:41 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் பிக் பாஸ் வீட்டில் நடந்த கலவரம், காதல் சம்பவங்கள் குறித்து கமல்ஹாசன் சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதொ 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரத்தில் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஃபாத்திமா பாபு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மக்கள் மனதில் இடம்பிடிக்க தவறிய வனிதா விஜயக்குமார் வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் அபிராமி, சேரன், சரவணன், மீரா, மோகன் வைத்தியா ஆகிய 5 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் இருந்து யார் காப்பாற்றப்படுகிறார் என்பது குறித்த யூகத்தை 27ம் நாள் எபிசோடில் கமல்ஹாசன் எழுப்பியிருக்கிறார்.
எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ள போட்டியாளர்கள் காப்பாற்ற விரும்புபவர்களின் பெயரை தெரிவிக்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி, மீரா, சரவணன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், சரவணன் மீரா காப்பாற்றப்ப வேண்டும் என்றும் கூறினர்.
இவர்களையடுத்து, மோகன் வைத்தியா சேரனை கப்பாற்ற விரும்பினார், சேரனும், அபிராமியும் தங்களை தாங்கள் காப்பற்றிக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தனர். ஆக இந்த வாரம் காப்பற்றப்படும் போட்டியாளர் யார் என்பது குறித்து தனது கடமையின் பெயரால் நாளை தெரிவிப்பதாகக் கூறி கலம்ஹாசன் விடைபெற்றார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் 3வது போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.