"குத்திட்டேன், கொன்னுட்டேன்" ஜெயிலுக்குள் காதலி சோகத்தில் காதலன்! - Promo வீடியோக்கள் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியா, சாக்சி என ஒரு முக்கோண காதல் கதை நடந்து வருகிறது.

Bigg Boss Tamil Season 3 Today Promos Vijay Tv Kavin Losliya

இருவரில் யாரை தவிர்ப்பது? யாரை ஏற்று கொள்வது என்று புரியாமல் கவின் ஒருபுறம் தவித்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இருவருமே கவினை விட்டு ஒதுங்கி போக நினைக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று சாக்சி, இதய வடிவில் ஒரு சப்பாத்தியை போடுகிறார். அந்த சப்பாத்தி கவினுக்கு என தெரிய வந்ததும் அந்த சப்பாத்தியை கத்தியால் குத்திய லாஸ்லியா, 'குத்திட்டேன், கொன்னுட்டேன்' என்று கூறுகிறார். இதனால் ஒருபுறம் ஷெரின் திட்ட, இன்னொருபுறம் சாக்சி அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் லாஸ்லியாவிடம் தர்ஷன், 'அப்படியெல்லாம் செய்யாதே என்று கூற அதற்கு லாஸ்லியா 'நான் அப்படித்தான் செய்வேன்' என்று கூறுகிறார். அப்போது அங்கு வரும் ஷெரின் 'அவள் ஒண்ணும் சின்னக்குழந்தை இல்லை' என்று தர்ஷனிடம் கூறுகிறார்

பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக அமைதியாக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின் தற்போது கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PROMO 2

கவின் , சேரனை அடுத்து தற்போது சாக்ஷி , மீராமிதுன் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் இருவரும் தற்போது ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சாக்ஷி ஜெயிலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் கவின் சோகத்தில் மூழகியுள்ளார்.

இதனை அறிந்த லொஸ்லியா ஜெயிலுக்குள் இருக்கும் சாக்ஷியிடம் " தயவுசெய்து எனக்காக ரெண்டுபேரும் நல்லா இருக்குங்க, நான் எவ்வளவு நாள் இங்கு இருப்பேன்னு தெரியாது, ஆனால் நான் இருக்குறவரைக்கும் பார்க்கமுடியாது நீங்கள் இப்படி இருக்கிறதை, .கவினும் இதை நினைத்து ரொம்ப பீல் பண்ணினான் என்று கூற, உடனே சாக்ஷி நீ பீல் பண்றதுக்கு ஒண்ணுமில்லை, நீ எனக்கு நடுவில் வருவது போன்று நான் எதுவும் நினைக்கவில்லை என கூறுகிறார்.

பின்னர் லொஸ்லியா,  எனக்கு அவனை பிடிக்கும் ஆனால் அது லவ் இல்லை என தெளிவாக விளக்குகிறார். உடனே பிஜிஎம் மியூசிக் "கனவே கனவே கலைவதேனோ" என்று இசைக்க கவின் காதலியை பிரிந்த சோகத்தில் இருக்கிறார்.

இதனை கண்ட ரசிகர்கள் 2 நாள் வந்த இந்த காதலை வெளியே போன உடனே மறந்திடப்போறீங்க இதுக்கு எதுக்கு இவ்ளோவ் சீன் என திட்டி வருகின்றனர்.

"குத்திட்டேன், கொன்னுட்டேன்" ஜெயிலுக்குள் காதலி சோகத்தில் காதலன்! - PROMO வீடியோக்கள் இதோ வீடியோ