‘அந்த பொண்ணு என்கிட்ட Behave பண்ணினது..’- லொஸ்லியாவால் கண்ணீர்விட்ட ஷெரின்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 20, 2019 12:27 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 25ம் நாளில் நடந்த சப்பாத்தி கொலை சம்பவம் ஷெரின் மற்றும் லொஸ்லியா இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3ன் 25ம் நாளில் தர்ஷனை கலாய்ப்பதாக நினைத்து விளையாட்டாக லொஸ்லியா ஷெரின் சுட்டு ஹார்ட்டின் சப்பாத்தியை குத்திக் கொன்றார். இதனால் கடுப்பான ஷெரின் இதுபோன்று செய்யாதே என்று கூறியும் விளையாட்டுத்தனமாக அதை காதில் வாங்காமல் சென்றார் லொஸ்லியா.
இந்த பிரச்சனை கிச்சனோடு முடிந்துவிடும் என்று பார்த்தால் மறுநாளும் தொடர்கதையாக தொடர்கிறது. லொஸ்லியாவின் நடவடிக்கையால் ஷெரின் கடுப்பில் இருப்பதை அறிந்த லொஸ்லியா அவரிடம் சமாதானம் பேசினார். அப்போது, தான் விளையாட்டாக செய்ததாகவும், அது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றும் கூறினார்.
அப்போது ஷெரின், அனுபவம் உள்ளவர்களை மதிக்க கற்றுக் கொள் என கூறியது லொஸ்லியாவை டிஸ்டர்ப் செய்ய, மறுபடியும் இது பற்றி ஷெரினிடம் கதைத்தார். அப்போது என்னிடம் ஒருவர் எப்படி நடந்துக் கொள்கிறார்களோ அப்படி தான் நானும் நடந்துக் கொள்வேன் என்றார். அதற்கு ஷெரின் வாழ்க்கையில் அனுபவம் உள்ளவர்கள் கூறுவதை கேட்டுக் கொள் என்ற அர்த்தத்தில் தான் கூறியதாக சொல்லிவிட்டு சென்றார்.
இருப்பினும், இந்த பிரச்சனை ஓயவில்லை, மறுநாள் காலையும் தொடர, அழுகையுடன் சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு ஷெரின் டைனிங் ஹாலை விட்டு வெளியேறினார். அவர் சாக்ஷியிடம் இது பற்றி கூறுகையில், ‘அந்த பொண்ணு என்கிட்ட பிஹேவ் பண்ணது எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. நல்லா பேசிட்டு பூனைக்குட்டின்னு சொல்லிட்டு தானே இருந்தேன். மரியாதை இல்லாம நான் எப்போ அவக்கிட்ட பேசியிருகேன்’ என வருந்தி கண்ணீர் வடித்தார். நாளைக்காவது இந்த பிரச்சனை ஓய்ந்து முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.