Bigg Boss Tamil 3 : ‘நாட்டாமைக்கும் அந்த பொண்ணுக்கும்..! மைனர் சொன்ன கதை!’ -Performance-ல் பிண்ணிய சேரப்பா!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 26, 2019 02:28 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராமிய டாஸ்க்கில் 20 ஆண்டுகளாமாக ஒளித்துவைத்திருந்த நாட்டாமையின் குடும்ப ரகசியம் ஊர் மக்களுக்கு அம்பலமானது.

நாட்டாமை 20 ஆண்டுகளாக கட்டிக்காத்த குடும்ப ரகசியத்தை கீறிப்பட்டி ஊர் மைனரான சரவணன் பாண்டி என்கிற கவின், மாரி என்கிற சாண்டி ஆகியோரிடம் விளக்கினார். அவர் கூறிய கதை என்ன வென்றால்... ‘உங்க ஊரு நாட்டாமையும் எங்க ஊரு தலைவியும் யாருன்னு தெரியுமா? ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி, அந்த தலைவிக்கு நாட்டாமை ஆகணும்னு ஆசை ஆனா நாட்டாமை அதுக்குவிட, அதுனால கோச்சிக்கிட்டு கை குழந்தையான லொஸ்லியாவை தூக்கிக்கிட்டு ஊரவிட்டு போயி, சொன்னபடி வேற ஊருக்கு நாட்டாமையா ஆயிடுச்சு’ என்று சொல்லி முடித்தார்.
இந்த கதையை ஊர் மக்களிடம் கவின் தண்டோர போட்டு சொல்ல, துக்கம் தாங்காமல் 20 ஆண்டுகளாக மனசுக்குள் அடக்கி வைத்திருந்த உண்மையை இரு ஊரு நாட்டாமைகளும் போட்டு உடைத்தனர். இதனிடையே, வீட்டில் இருக்கும் பொருட்களை களவாடி விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் லொஸ்லியாவை நாட்டாமை கையும் களவுமாக பிடித்தார்.
களவானி பயபுள்ளைக்கு புத்தி புகட்ட லொஸ்லியாவை இழுத்துவர, ‘அவ நம்ம புள்ள லே..’ என தலைவி கூற அப்படியே, பாச மழையில் நாட்டாமை குடும்பத்தினர் திளைத்தனர்.