Bigg Boss Tamil 3 : ‘சேரன் என்ன எங்க தொட்டாரு தெரியுமா?’- இந்த வாரம் மீராவோட டார்கெட் இவரா? அட பாவமே!!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 26, 2019 02:13 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கிராமிய டாஸ்க்கில் தினசரி ஒரு பிரச்சனை என்றால், மீரா கிளப்பியிருக்கும் பிரச்சனை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற படைப்புகளால் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்திருக்கும் இயக்குநர்களில் சேரன் மிக குறிப்பிடத்தக்கவர். சமூக பொறுப்புணர்வு கொண்ட கதை, குடும்ப கதைகளை படைத்த சேரன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது, அவர் ஏன் அங்கு செல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மக்களிடத்திலும் ஒரு கருத்து நிலவியது.
எனினும், எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல், அவரது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் இல்லாமல் அவர் வெளியே வந்தால் போதும் என்ற எண்ணத்தில், சேரனுக்கு தங்களது ஆதரவுகளை அளித்து வந்தனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற மீரா, ஆரம்பம் முதலே ஒவ்வொருவரிடம் வேற்றுமையாக நடந்துக் கொண்டு பிடிக்காதவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் தினசரி நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்து வந்த மீரா, இந்த வாரத்துக்கான லக்ஸுரி டாஸ்க்கின் போது, லொஸ்லியாவிடம் இருந்த பொருளை பிடுங்கச் சென்ற சேரன், தனது இடுப்பை பிடித்து முரட்டுத்தனமாக தள்ளினார் என்ற குற்றச்சாட்டை பொதுமேடையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சேரனுக்கும், மீராவுக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், அத்தனை பெண்கள் இருக்கையில் தன்னிடம் மட்டும் வேண்டுமென்றே அவர் தவறாக முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து ஹவுஸ்மேட்ஸ் மீராவுக்கு எடுத்துக்கூற, மனம் உடைந்த சேரன் மன்னித்துவிடு என்று கூறியபடி உள்ளே சென்று வருந்தினார்.
எனக்கென்று இருக்கும் பெயரை ஒரே வார்த்தையில் இந்த பொண்ணு கலங்கப்படுத்திடுச்சே என்றும், தனது மகள்களின் எதிர்காலம் முக்கியம், இந்த குற்றச்சாட்டை என்னால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறி இயக்குநர் சேரன் கண்ணீர் வடித்தது, பார்வையாளர்களை கனக்கச் செய்தது.
இந்த வாரம் எவிக்ஷனுக்கு மீரா, சேரன் ஆகிய இருவருமே நாமினேட் ஆகியுள்ள நிலையில், யார் நிகழ்ச்சியை தொடர்வார்கள், இந்த சர்ச்சைக்கு வார இறுதியில் கமல் என்ன கருத்து கூறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.