Bigg Boss Tamil 3: பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுனிடம் போலீஸ் விசாரணை?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 25, 2019 08:56 PM
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம் எழும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மீரா மிதுன் 16வது போட்டியாளராக பங்கேற்றார். ‘8 தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மீரா மிதுன், மிஸ் சவுத் குயீன், மிஸ் தமிழ்நாடு 2016, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட அழகி போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக ‘மிஸ் தமிழ்நாடு 2019’ என்ற நிகழ்ச்சி நடத்தப்போவதாக பல பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக மீரா மிதுன் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் வாராவாரம் போட்டியாளர்களிடம் வம்பிழுத்து சண்டை வாங்கிக் கொண்டிருக்கும் மீரா இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
BIGG BOSS TAMIL 3: பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுனிடம் போலீஸ் விசாரணை? வீடியோ