வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளே நுழையவிருக்கிறாரா 'கயல்' ஆனந்தி? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 25, 2019 03:01 PM
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. காதல், மோதல் என போட்டியாளர்களிடையே நிகழும் பிரச்சனைகள் வெகு சுவாரஸியமாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கடந்தவாரம் மோகன் வைத்தியா வெளியேறினார். அவர் வெளியேறியதும் அவர் மாதிரியே வேஷம் போட்ட சாண்டி அவர் மாதிரியே அனைவரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கலாய்த்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக கயல் ஆனந்தி உள்ளே போகப் போவதாக செய்திகள் வெளியானது. Behindwoods சார்பாக கயல் ஆனந்தியை தொடர்பு கொண்டபோது அவர் இந்த செய்தியை மறுத்தார்.
Tags : Aanandhi, Bigg Boss 3, Kamal Haasan