Bigg Boss Tamil 3: 'இப்படி பண்றவன்லாம் ஆம்பளையா?' - கடுப்பில் காரி துப்பிய மதுமிதா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 25, 2019 12:15 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 31ம் நாளில் தொடர்ந்த கிராமிய டாஸ்க்கில் கலகலப்பாக இருக்கும் சாண்டி மாஸ்டரிடம் மதுமிதா மல்லுக்கட்டியது பார்வையாளர்களை அதிர வைத்தது.

இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு, கீரிப்பட்டி தலைவியாக மதுமிதாவும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரனும் நியமிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து போட்டியாளர்களுக்கும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன.
இந்த டாஸ்க்கின் படி, கழிவறைக்குச் செல்லவும், பாத்திரம் கழவும் பாம்புப்பட்டி மக்கள் ஒப்புதல் அளித்தால் மட்டும் கீரிப்பட்டி மக்களால் அந்த வேலைகளை செய்ய முடியும். அதுபோல், சாப்பிடவும், வீட்டுக்குள் வருவதற்கும் கீரிப்பட்டி மக்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பாம்புப்பட்டி அவர்களால் உணவு சாப்பிடவும், வீட்டுக்குள் செல்லவும் முடியும். இதில் ஒரு ஊர் காரர், மற்ற ஊர் காரருக்கு டாஸ்க்குகளை வழங்கி, அவர்களுக்கு தேவையான வேலையைச் செய்ய அனுமதி அளிக்கலாம்.
இப்படியிருக்க, தலைவியான மதுமிதாவிற்கு வருத்தப்படாத வாலிப சங்க தலைவி சாக்ஷி முகத்தில் பேஸ்ட் மீசை போட்டு மாரியம்மா பாடலுக்கு நடனமாடும்படி டாஸ்க் கொடுத்தார்கள். மூவ்மெண்ட் கொஞ்சம் ஹெவியா போடும்படி சாண்டி கேட்க, கோபமடைந்த மது, எரியுது சீக்கிரம் பாடுங்க என்றார். தொடர்ந்து சாண்டி மதுவை சீண்டும் விதமாக பேச, ஆத்திரத்தின் உச்சத்தை தொட்ட மது சாமியாடிவிட்டார்.
மதுமிதா பேசும்போது, ‘அடுத்தவங்க வலிய பாத்து சிரிக்கிறவன் ஆம்பளையா?’ என காரி துப்பினார். ‘அவன சொன்னா கோபம் வருது, அப்புறம் ஏன் மத்தவங்கள கலாய்க்குற’ என சத்தமாக பேசி சாண்டியுடன் சண்டைக்கு நின்றார். வார்த்தையை விடாதீங்க என்று ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் செய்ய முயன்றும் சிறிது நேரத்திற்கு மதுமிதா கோபத்துடனே இருந்தார்.
பிறகு அவர் சமாதானம் ஆனதும் சாண்டியும், கவினும் சென்று மன்னிப்புக் கேட்டு சமாதானப்படுத்தினர். இன்றைய எபிசோடில் சாண்டி மற்றும் மதுமிதா இடையே நடந்த சண்டை ஹவுஸ்மெட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.