Bigg Boss Tamil 3: '6th sense பற்றி கிளாஸ் எடுத்த மீரா'!! இந்த பொண்ணு என்ன சொல்ல வருது..? என்று குழம்பிய சரவணன்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 25, 2019 02:10 AM
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 31வது நாளில் கிராமிய டாஸ்க்கில் மதுமிதா மற்றும் சாண்டி இடையே வெடித்த சண்டை ஹைலைட்டாக அமைய, மீரா இவ்விவகாரம் குறித்து கருத்து கூறிய அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக, பிக் பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என இரு கிராமங்களாக பிரிக்கப்பட்டு, கீரிப்பட்டி தலைவியாக மதுமிதாவும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரனும் நியமிக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து போட்டியாளர்களுக்கும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன.
இதில், ஊர்வம்பை விளைக்கு வாங்கும்படியான கதாபாத்திரம் மீராவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. போன எபிசோட்டிலேயே சேரனும் சண்டையை வளர்த்துக் கொண்டதால், 31ம் நாள் எபிசோடில் நடந்த சாண்டி, மதுமிதா சண்டையில் அறிவுரை வழங்கினார். இந்த சண்டையால் பிக் பாஸ் வீடே போர்க்கள்மாக மாறி, பிரச்சனைகள் தணிந்திருந்தபோது மீரா கருத்து கூறினார்.
சாண்டி, சரவணன் ஆகியோர் இது பற்றி பேசிக் கொண்டிருக்கையில், மீரா Human Beings பவர் என்ன தெரியுமா? அது தான் 6th sense.ஒருத்தவங்க நம்பகிட்ட பேசும்போதே அவங்க என்ன மாதிரி நோக்கத்துல பேசுறாங்கன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம் என சொல்லி வாயை மூடுவதற்குள், சரவணன் தனது உருட்டு முழியால் ஆயிரம் அர்த்தங்களை உணர்த்திவிட்டார். அதனை பார்த்த பார்வையாளர்கள், சரவணன் நமது மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டார் என்று நினைத்துக் கொண்டனர்.
😂🤪#BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision #VijayTV pic.twitter.com/ad1DPWJiLZ
— Vijay Television (@vijaytelevision) July 24, 2019