Bigg Boss Tamil 3: மறுபடியுமா..? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..! - துளிர்விடும் சாக்ஷி-கவின் நட்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 24, 2019 11:52 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த சில வாரமாக சாக்ஷி-கவின் - லொஸ்லியா இடையேயான முக்கோண நட்பா? காதலா? விவாதம் உச்சம் தொட்ட நிலையில், எல்லாமே Friendship தான் என மூவரும் முடிவெடுத்தாலும், அதையும் தாண்டி புனிதமானதாக கருதியதால், சாக்ஷி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
![Bigg Boss Tamil 3 Highlights - Kavin and Sakshi tries to revive their friendship again Bigg Boss Tamil 3 Highlights - Kavin and Sakshi tries to revive their friendship again](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-tamil-3-highlights-kavin-and-sakshi-tries-to-revive-their-friendship-again-news-1.jpg)
இதன் விளைவாக இந்த வாரம் நாமினேஷனுக்கு கவினும், சாக்ஷியும் ஒருவரையொருவர் நாமினேட் செய்துக் கொண்டனர். இந்நிலையில், இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்படுவதாகவும். கீரிப்பட்டி தலைவியாக மதுமிதா இருப்பார் என்றும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரன் இருப்பார் எனவும் பிக் பாஸ் தனது கம்பீர குரலால் அறிவித்தார்.
இந்த டாஸ்க் தொடங்குவதற்கு முன்பாக சாக்ஷி மற்றும் கவின் இடையே நடந்த சில நிமிட உரையாடல், பார்வையாளர்களை என்னது மறுபடியும் முதல இருந்தா..? என்ற சிந்திக்க வைத்தது. நடந்ததெல்லாம் மறந்துவிடலாம். இந்த் வீட்டிற்குள் நுழைந்த போது நமக்குள் எந்த ஒரு அளவிலான நட்பு இருந்ததோ அதையே இங்கிருந்து செல்லும் வரை நான் எதிர்ப்பார்க்கிறேன். நாம் இனி நல்ல Friends-ஆக இருக்கலாம் என கவினிடம் கூறுகிறார். கவினும் ஓகே மச்சன் என்று ஆமோதிக்கிறார்.
இதனை பார்த்த பார்வையாளர்கள் அடுத்து இந்த Friendship என்ன பிரச்சனையை இழுத்துவிட போகிறதோ? இதனால் இன்னும் எத்தனை சண்டைகள் உருவாகப்போகிறதோ என்ற குழப்பத்தில் உள்ளனர்.