Bigg Boss Tamil 3: ரணகளமாகும் பிக் பாஸ் வீடு - நாட்டாமை சேரனுடன் மல்லுக்கு நிற்கும் தாய் கிழவி மீரா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 24, 2019 01:05 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 30ம் நாளில் நடந்த கிராமத்து டாஸ்க்கில் நாட்டாமை சேரனுக்கும், தர்ஷனின் தாய் மீரவுக்கும் இடையே சண்டை முற்றியது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மீரா மிதும், மற்ற போட்டியாளர்களிடம் வம்பு வளர்ப்பதை வழக்கமாக வைத்திருப்பது போன்ற கருத்து மக்கள் மத்தியிலும், ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் நிலவுகிறது.
வாரத்துக்கு ஒருவர் என குத்தகைக்கு எடுத்திருக்கும் மீரா, இந்த வாரம் சேரனை தேர்வு செய்திருக்கிறார் போல. பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே சேரன் மற்றும் மீராவுக்கு இடையே ஒத்துவாராமல் இருக்க, இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீடு பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிக்கப்படுவதாகவும். கீரிப்பட்டி தலைவியாக மதுமிதா இருப்பார் என்றும், பாம்புப்பட்டியின் நாட்டமையாக சேரன் இருப்பார் எனவும் பிக் பாஸ் தனது கம்பீர குரலால் அறிவித்தார்.
இதையடுத்து, போட்டியாளர்களுக்கு பல்வேறு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை கொடுத்தார் பிக் பாஸ், அதில், மீரா தர்ஷனுக்கு அம்மாவாகவும், தர்ஷனின் மனைவியாக ஷெரினும் நியமிக்கப்பட்டனர். டாஸ்க் தொடங்கியதும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே மாறினர்.
கிராமத்தில் நடக்கும் பிரச்னையை தீர விசாரித்து தீர்ப்பு சொல்லும் பொறுப்பு சேரனுக்கு வழங்கப்பட, ஷெரினின் கையை பிடித்து இழுத்த விவகாரம் தொடர்பாக சாண்டி மீது தர்ஷன் மற்றும் மீரா பிராது கொடுக்கின்றனர். இதனை விசாரிக்கும் போது, மீரா வழக்கம் போல தன் போக்கில் ‘வல... வல..’ என்று பேச, அதற்கு சேரன் அவரை அதட்டும்படி பேசுகிறார். மீராவும் விடாமல் சேரனிடம் சண்டைக்கு போகிறார்.
இந்த கிராமிய டாஸ் இன்றைய எபிசோடிலும் தொடரும் என்றும், இதன் மூலம் ஒரு பெரிய பஞ்சாயத்தை பிக் பாஸ் எதிர்கொள்ள போகிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.