''அவ பைத்தியம் தம்பி'' - கோரஸாக பாடும் கவினும் சாண்டியும்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 25, 2019 10:13 AM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு கிராமத்து அணிகளாக பிரிய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. சும்மாவே அடித்துக் கொள்ளும் போட்டியாளர்களுக்கு இது கூடுதல் உற்சாகமாக இருந்திருக்கும்.

தற்போது விஜய் டிவியில் புதிய புரோமோ ஒளிபரப்பாகியிருந்தது. அதில் எப்பவுமேவா அடிச்சுக்கிட்டே இருப்போம் என்று ஜாலியாக ஒற்றுமையாக இருந்தனர். அப்போது கவினும் சாண்டியும் ஊருவிட்டு ஊரு வந்து வம்பு கிம்பு பண்ணாதீங்க.என்று பாட்டு பாடி அசத்தினர்.
இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில், சேரனை பார்த்து மீரா, நீங்க நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சேரனுக்கு ஆதரவாக மீராவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது சேரன் நான் இனி யாரிடம் பேச மாட்டேன் என கோபமாக எழுந்து செல்கிறார்.
தற்போது வெளியான 3வது புரோமோவில் 'அந்த பையன ஏன் சைட்ட அடிக்குற?' என்று லாஸ்லியாவை மதுமிதா கேட்கிறார். அதற்கு லாஸ்லியா, கவினை அழைத்து, 'பாரு அவங்க என்ன சொல்றாங்கனு' புகார் செய்கிறார். பிறகு அங்கு வரும் பொண்ணு தான என்ன வந்ததுல இருந்து சைட் அடிக்குறேனு சொல்லிடுச்சுல என்கிறார்.
''அவ பைத்தியம் தம்பி'' - கோரஸாக பாடும் கவினும் சாண்டியும் வீடியோ