Bigg Boss Tamil 3 : ‘அடி யாத்தி இவன் என்ன இப்புடி பாக்குறான்..?’- லொஸ்லியாவின் ஆட்டத்தில் கவுந்த கவின்!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 26, 2019 02:54 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில், கீறிப்பட்டிக்காரர்களும், பாம்புப்பட்டிக்காரர்களும் ஊர் பகையை மறந்து உறவுக்காரர்களாகினர்.

இதனை கொண்டாடும் பொருட்டு பாம்புப்பட்டியினர், கீறிப்பட்டி மைனர் தலைமையில் திருவிழா நடத்தினர். சும்மா ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய திருவிழாவில், நாட்டாமை மகள் லொஸ்லியா ஆடிய நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. பார்வையாளர்களை மட்டுமா? கவின் வாயை பிழந்துக் கொண்டு லொஸ்லியாவின் ஆட்டத்தை ரசித்தார்.
அருகில் சாக்ஷி அமர்ந்திருந்தும், அதனை சட்டை செய்யாமல், வச்ச கண்ணு வாங்காமல் லொஸ்லியாவை பார்த்து அசடு வழிந்தார் கவின். எது எப்படியோ இந்த திருவிழாவோடு பல சண்டைகள், சர்ச்சைகளை தாண்டி கிராமிய டாஸ்க் முடிவுப்பெற்றது.
Tags : Kavin, Losliya, Bigg Boss Tamil 3, Bigg Boss 3, Village Task