கவின் சிங்கிளா? இல்ல கமிட்டட்-ஆ? - சிவகார்த்திகேயன் பட இயக்குநர் Fun
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 23, 2019 02:42 PM
சிவகார்த்திகேயன் இயக்கி நடித்த கனா படத்தை எழுதி, இயக்கியவர் அருண்ராஜா காமராஜா. இவர் பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பண்முகம் கொண்டவர். இவர் நட்புடனா என்னனு தெரியுமா படத்தில் கவினுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் கவினின் செயல்பாடு குறித்தும் கனா படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் கவினை எனக்கு நட்புனா என்னனு தெரியுமா படத்தின் படப்பிடிப்பில் இருந்து தெரியும். அவன் நல்லா பழகினான். ஆனால் அதற்கும் தற்போது அவன் பிக்பாஸ் வீட்டில் நடந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. என்றார்.
அப்போது தொகுப்பாளர் யார் உங்களுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் நன்றாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அவர் சதீஷ் உள்ளே வந்தால் ஜாலியாக இருக்கும். அட்லி வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.
பின்னர் தொகுப்பாளர் வெளியில் கவின் கமிட்டா ? அல்லது சிங்கிளா என்ற சந்தேகம் நிறைய கேர்ள்ஸிடம் இருக்கிறது. அது பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், கேர்ஸ்க்கு தான அது எனக்கு எதுக்கு என்று நக்கலாக பதிலளித்தார்.
கவின் சிங்கிளா? இல்ல கமிட்டட்-ஆ? - சிவகார்த்திகேயன் பட இயக்குநர் FUN வீடியோ