BIG-BREAKING: தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 24, 2019 08:50 PM
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ‘அசுரன்’ திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் காமெடி நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சர்ப்ரைஸ் காம்போ ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கோ’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘யாமிருக்க பயமே’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார் பேனரின் கீழ் ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.