Bigg Boss Tamil 3: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ‘நைனா’ புகழ் மோகன் வைத்தியா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 21, 2019 11:08 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து 3வது போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வனிதா வெளியேறினார்.
இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகிய சேரன், அபிராமி, மீரா, சரவணன், மோகன் வைத்தியா ஆகிய 5 பேரில் அனைவரும் காப்பாற்றப்பட, மோகன் வைத்தியா மக்களிடம் குறிஅவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
மோகன் வைத்தியா வெளியேறினால் சர்ப்ரைஸாக பாட வைத்திருந்த ‘கமல் சார் காலிங் போயிட்டு வா நைனா..’ என்ற பாடலை கவினும், சாண்டியும் பாடி முடிக்க வழக்கம்போல் அழுகாச்சி முகமாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு மோகன் வைத்தியா வெளியேறினார்.