Bigg Boss Tamil 3: ‘நீயா பேசியது..! கட்டிப்புடி கட்டிப்புடிடா..’ - இந்த தளபதி Song Dedication யாருக்கு தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 23, 2019 12:44 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 29ம் நாளில் ‘பாட்டு பாடவா பார்த்து பேசவா’ என்ற புதிவிதமான டாஸ்கை பிக் பாஸ் வழங்கினார்.

இந்த டாஸ்க்கில் பாடல் பவுலில் இருந்து ஒரு சீட்டை எடுத்து அது யாருக்கு பொருந்தும் என்றுக் கூறி அந்த பாடலை அவருக்கு டெடிகேட் செய்ய வேண்டும். அதேபோல் பஞ்ச் டயலாக்குகள் இருக்கும் பவுலில் இருந்து ஒரு சீட்டை எடுத்து அதில் இருக்கும் வசனம் யாருக்கு பொறுந்தும் என்று கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் முதலாவதாக சீட்டை எடுத்த மதுமிதா, ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும்’ என்ற வசனத்தை கவின் மற்றும் மீராவுக்கு சம்ர்ப்பிப்பதாக தெரிவித்தார். பின்னர், கவின் தேர்வு செய்த சீட்டில், ‘நீயா பேசியது என் அன்பே...’ என்று விஜய் நடித்த திருமலை படத்தில் இடம்பெற்ற பாடலை சாக்ஷிக்காக கவின் டெடிகேட் செய்தார்.
அடுத்ததாக சாண்டி, ‘என்ன மாதிரி பசங்கள பாக்க பாக்க..’ என்ற வசனத்தை கவினுக்கு டெடிகேட் செய்தார். பின்னர், வந்த அபிராமி ‘கட்டிப்புடி கட்டிப்புடி டா..’ என்ற பாடலை பாடி அதனை மறுக்காமல், மறைக்காமல் முகெனுக்கு டெடிகேட் செய்தார்.