Bigg Boss Tamil 3: ‘லொஸ்லியாவின் தூக்கத்தை கெடுத்த பிக் பாஸ்..!’ - Punishment என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 23, 2019 12:20 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 29ம் நாளில் போட்டியாளர்கள் சிலரின் சோம்பலை முறிக்க எச்சரிக்கை விடுத்தார்.
பிக் பாஸ் வீட்டில் 29ம் நாளில் பகல் நேரத்தில் ஹவுஸ்மேட்ஸ் உறங்கக் கூடாது என்ற விதி இருக்கும் பட்சத்தில் பலமுறை பிக் பாஸ் எச்சரித்தும், மீரா உறங்கிக் கொண்டிருந்தார். அவரை துப்பாக்கிச்சுடும் சத்தத்தால் சாண்டியும், முகெனும் எழுப்பிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்துக்கான கேப்டன் ரேஷ்மாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், பலரும் பகலில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கேப்டனாக அதனை கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு எனக் கூறி எச்சரித்து அனுப்பினார்.
இனிமேல், எவளாச்சும் பகலில் தூங்குங்க அப்புறம் இருக்கு என கூறி ஹவுஸ்மேட்ஸை அலர்ட் செய்தார். ஆனாலும், லொஸ்லுயாவும், அபியும் வெளியே வந்து உறங்கியதும் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் ஒலித்தது. ரேஷ்மா வந்து பார்த்தபோது லொஸ்லியாவும், அபியும் உள்ளே ஓடிவிட்டனர்.
இதனால் கடுப்பான ரேஷ்மா, விளையாட்டுத்தனத்திற்கு அளவே இல்லையா, சமைக்கிறதா? இல்ல நீங்க தூங்குறீங்களான்னு வந்து பாக்குறதா? என கொந்தளித்தார். பின்னர், லொஸ்லியாவும், அபியும் வந்து ரேஷ்மாவிடம் மன்னிப்புக் கேட்க, அவர்களை கையை கட்டி ஒரு ஓரத்தில் உட்காருமாறு பனிஷ்மெண்ட் கொடுத்தார்.