கரகாட்டக்காரன் காமெடிக்கு பிறகு இந்த நடிகர் பழத்துக்கு எவ்ளோ குடுத்திருக்காரு பாருங்க.!!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 24, 2019 12:29 PM
பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் ஸ்டார் ஹோட்டலில் இரண்டு வாழைப்பழம் வாங்கி அதன் விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் சன்டிகரில் உள்ள ஜே. டபுள்யூ. மாரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார். ஹோட்டலில் இருக்கும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த பிறகு அவர் இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்துள்ளார்.
வாழைப்பழங்களை அவரின் அறைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளனர். வாழைப்பழத்துடன் வந்த பில்லை பார்த்த ராகுல் போஸால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.
2 வாழைப்பழங்களுக்கு ரூ. 442. 50 பில் போட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யையும் சேர்த்து தான் அந்த பில். பில்லை பார்த்த ராகுல் அதிர்ச்சி அடைந்து அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வெல்டன் ஜே.டபுள்.யூ மாரியட் சன்டிகர் என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.
You have to see this to believe it. Who said fruit wasn’t harmful to your existence? Ask the wonderful folks at @JWMarriottChd #goingbananas #howtogetfitandgobroke #potassiumforkings pic.twitter.com/SNJvecHvZB
— Rahul Bose (@RahulBose1) July 22, 2019