Bigg Boss Tamil 3: 'நைனா ஓ நைனா.. போயிட்டியே நைனா..!' - மோகன் வைத்தியாவின் பிரிவால் வாடிய சாண்டி & கோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 22, 2019 11:34 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் வீட்டைவிட்டு வெளியேறிய மோகன் வைத்தியாவின் பிரிவு சாண்டி மற்றும் கவினை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்தியா வெளியேறினார். அவர் பிக் பாஸ் வீட்டில் சாண்டி, கவின், தர்ஷன், முகென் உள்ளிட்ட இளைஞர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். விளையாட்டு போக்கில் அவரை கலாய்ப்பதை சாண்டி வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது மோகன் வைத்தியா வெளியேரியதும், அவரது தாக்கம் தன்னை மிகவும் பாதித்திருப்பதாக கூறிய சாண்டி, மோகன் வைத்தியா விட்டுச் சென்ற பொருட்களை பயன்படுத்தி, அவரது கெட்டப்பிற்கு மாறி, ஹவுஸ்மேட்ஸை கட்டிப்பிடித்து பாசத்தில் முத்த மழை பொழிந்தார்.
மோகன் வைத்தியாவிற்காக சாண்டி, கவின் கம்போஸ் செய்த பாடலான ‘தேவர்மகன்’ பாடல் ‘வானம் தொட்டு போனான் மானம் உள்ள..’ பாடலை தழுவி, ‘வீட்ட விட்டு போன எங்க கிரேட்டு நைனா, துக்கதுல நாங்க நீயும் அங்க ஃபைனா?’ என்ற பாடலை பாடி அவரது பிரிவை எண்ணி வருந்தினர்.