Bigg Boss Promo 2: மீராவை பார்த்து கேவலமாக திட்டிய சேரன் - கலவரமான பிக்பாஸ் வீடு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 23, 2019 01:13 PM
பிக்பாஸ் சீசன் 3யில் மூன்றாவதாக போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மோகன் வைத்தியா. அதனைத் தொடர்ந்து நேற்று ( திங்கள் கிழமை) எலிமினேஷனுக்கான நாமினேஷன் பிராசஸிங்கில் கவின் சாக்ஷியையும், சாக்ஷி கவினையும் நாமினேட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்கள் இரு கிராமத்து அணிகளாக பிரிந்து அலப்பறை செய்கின்றனர். ஆனால் அது காண்பதற்கு மிகுந்த கலாட்டாவாக இருந்தது.
இதனையடுத்து தற்போது புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நாட்டாமையாக சேரன், என்ன பிரச்சனை என்கிறார். அப்போது மீரா ஏதோ சத்தமாக பேச, சேரன் அவரை பார்த்து ஏய் வாய மூடு என்கிறார். அதனால் பிக்பாஸ் வீடு கலவரம் போல் காட்சியளிக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று பிக்பாஸ் பார்த்தால் தெரியும்.
தற்போது பிக்பாஸ் புதிய புரோமோவில் சாக்ஷி கருப்பு டிரெஸ் அணிந்திருக்கிறார். மற்றொரு பக்கம் கவின் தனது கருப்பு டிரெஸை அணிவதற்கு தார் செய்து கொண்டிருக்கிறார். அந்த பக்கம் வரும் அபிராமி உள்ளிட்டோர் நீங்களும் கருப்பா என கவினை கலாய்க்கிறார்.
BIGG BOSS PROMO 2: மீராவை பார்த்து கேவலமாக திட்டிய சேரன் - கலவரமான பிக்பாஸ் வீடு வீடியோ