பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 இன்றைய நாளுக்கான  மூன்றாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 Tamil Vijay Tv Hotstar Kamal Haasan Losliya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான Freeze டாஸ்க் செக்மெண்ட் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார். அங்கிருந்து போட்டியாளர்களை ரகசியமாக பார்த்து, அவர்காளின் உரையாடல்களை கவனித்து, கவினை கண்டித்து கடிதமும் எழுதினார்.

இந்நிலையில்,இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில் சேரன் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வருகிறார். தன் தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் லாஸ்லியா கண் கலங்குகிறார்.

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ