சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' செகண்ட் லுக் போஸ்டர் எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் படம் 'தர்பார்'.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Rajinikanth, Nayanthara, Anirudh's Darbar second look

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் குறித்து தற்போது வெளியாகியுள்ளது.

லைக்கா புரொடக்ஷன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், எல்லோருக்கும் ஓனம் வாழ்த்துகள் . இந்த நன்னாளில் ஆச்சரியங்களை காண தயாராகுங்கள். தர்பார் செகண்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.