யோகிபாபு - விஜய் டிவி ராமர் Combo-வின் காமெடி கலாட்டா ஆரம்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் அஞ்சலி, யோகி பாபு,  விஜய் டிவி ராமர் நடிக்கும் ஃபேண்டஸி காமெடி  படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

Anjali Yogi Babu Vijay TV Fame Ramar Shoot Begins Today

பலூன் படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமான சினிஷ், இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அஞ்சலி, யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி ராமரும் நடிக்கிறார்.

படத்தில் பேஸ்கட்பால் பயிற்சியாளராக அஞ்சலி நடிக்க, அவரை காதலிக்கும் கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்த யோகிபாபு, இந்தமுறை அஞ்சலியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இன்று  தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களிலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.