காஜல் நடிக்கும் வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸ் இனிதே ஆரம்பம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் புதிய வெப் சீரிஸின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Venkat Prabhu Kajal Hotstar web series shoot starts from today

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து, வெப் சீரிஸ் ஒன்றை இயக்க வெங்கட் பிரபு ஆயத்தமாகியுள்ளார்.

ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த வெப் சீரிஸில் நடிகர் வைபவ் ஹீரோவாகவும், மற்றொரு நடிகையாக கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக உருவாக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.